கண்டி மற்றும் நுவரெலியாவில் உள்ள தபால் அலுவலகங்களை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்து இன்று செவ்வாய்க்கிழமை (07) நள்ளிரவு முதல் 48 மணிநேர அடையாள வேலை நிறுத்தத்தில் ஈடுபட தபால் ஊழியர்கள் தீர்மானித்துள்ளனர்.
அரசாங்கம் பிரச்சினைக்கு தீர்வுகாணத் தவறினால் தொடர்ச்சியான வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதற்கு தபால் ஊழியர்கள் தயாராக இருப்பதாக ஒன்றிணைந்த தபால் தொழிற்சங்க முன்னணியின் இணை அழைப்பாளர் சிந்தக பண்டார தெரிவித்துள்ளார்.
இதேவேளை, நுவரெலியாவில் உள்ள தபால் அலுவலகத்தை விற்பனை செய்யும் அரசாங்கத்தின் தீர்மானத்துக்கு இன்று செவ்வாய்க்கிழமை வெளிநாட்டு சுற்றுலா பயணிகளும் தங்களின் எதிர்ப்பை வெளிப்படுத்திருந்தமை குறிப்பிடத்தக்கது.