அறிவிக்கப்பட்டுள்ள உள்ளுராட்சி சபைத் தேர்தல் வெற்றியை உறுதி செய்வதற்கு கட்சிகளினால் நடாத்தப்பட்டு வரும் பிரச்சார நடவடிக்கைகள் இன்று (07) நள்ளிரவுடன் நிறைவடையவுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இந்த வகையில், பிரதான கட்சிகள் பலவும் தமது இறுதிப் பிரச்சாரக் கூட்டங்களை முக்கிய நகர்களில் ஏற்பாடு செய்துள்ளன.
இன்று நள்ளிரவின் பின்னர் தேர்தல் தொடர்பில் எந்தவொரு பிரச்சார நடவடிக்கையிலும் ஈடுபடுவது சட்டவிரோதமானது எனவும் ஆணைக்குழு அறிவித்துள்ளது.