இலங்கை மின்சார சபை ஊழியர்கள் எதிர்கொண்டுள்ள பிரச்சினைகளுக்கு இன்றைய தினத்துக்குள் (18) அரசாங்கம் தீர்வொன்றை வழங்காவிடின் பாரிய தொழிற்சங்க நடவடிக்கையொன்றை முன்னெடுக்கப் போவதாக இலங்கை மின்சார சபை கூட்டு தொழிற்சங்க ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் ரஞ்ஜன் ஜயலால் தெரிவித்துள்ளார்.
தமது கோரிக்கைகளை நிறைவேற்றித் தருமாறு கோரி கடந்த ஏழு தினங்களாக இ.மி.சபையின் தலைமையகத்தின் முன்னாள் உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டு வருவதாகவும் இன்றைய தினத்துக்குள் அரசாங்கம் தீர்வொன்றை வழங்க வில்லையாயின் இந்தப் போராட்டம் வேலைநிறுத்தப் போராட்டமாக மாறும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.