வாகனத்திலிருந்து இறங்கிய வரை அதே திசையில் வந்த மற்றொரு வாகனம் மோதித் தள்ளியது. அதில் காயமடைந்த நபர் யாழ்.போதனா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இந்த விபத்து இன்று காலை நுணாவிலில் இடம்பெற்றது.
பட்டா ரக வாகனத்தைச் செலுத்தி வந்த சாரதி, வாகனத்தை நிறுத்தி விட்டு இறங்கிய போது, அதே திசையில் வந்த வாகனம் அவரை மோதியதெனத் தெரிவிக்கப்பட்டது.
சாவகச்சேரிப் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.