ஐக்கிய நாட்டு நிறுவனம் இன்று உலக அகதிகள் தினத்தை அனுசரிக்கிறது.
உலக அளவில் 100 மில்லியன் அகதிகள் இருப்பதாக அது மதிப்பிட்டிருக்கிறது.
கடந்த ஆண்டு அந்த எண்ணிக்கை 26.6 மில்லியனாகப் பதிவானதாய் நிறுவனத்தின் அகதிகள் அமைப்பு நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.
உக்ரேனில் தொடரும் போர் மட்டுமின்றி, ஆப்பிரிக்கா, ஆசியா ஆகியவற்றில் நிலவும் அரசியல் நெருக்கடிகளால் அந்த நிலை ஏற்பட்டுள்ளது.
அகதிகள் நெருக்கடி, இக்காலத்தின் கடுமையான குற்றம் என நிறுவனத்தின் தலைமைச் செயலாளர் Antonio Guterres வருணித்தார்.
இவ்வாண்டின் உலக அகதிகள் தினத்தின் கருப்பொருள் ‘பாதுகாப்பை நாடுவதற்கான உரிமை’ என்று தெரிவிக்கப்பட்டது.