நாட்டின் மேல், மத்திய, சப்ரகமுவ மற்றும் வடமேல் மாகாணங்களிலும், காலி,மாத்தறை ஆகிய மாவட்டங்களிலும் இன்று சில நேரங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது.
மத்திய, வடக்கு, வட-மத்திய மற்றும் வடமேல் மாகாணங்களிலும், ஹம்பாந்தோட்டை மற்றும் திருகோணமலை மாவட்டங்களிலும் காற்று (30-40) கிலோமீற்றர் வேகத்தில் வலுவாக இருக்கும்.
சில இடங்களில் மழைவீழ்ச்சி 50 மில்லிமீற்றராக பதிவாகக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.