நவக்கிரக குரு பகவானின் அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு வழிபடுவது குரு பகவானால் உண்டாகும் கெடுபலன்களைக் குறைக்கும்.
குருவைப் பற்றிய ‘ஸ்ரீகாண்டேயா’ என்ற சுலோகம், 7 வகையான குரு இருப்பதாக சொல்கிறது. அதாவது தேவகுரு – பிரகஸ்பதி, அசுரகுரு – சுக்ராச்சாரியார், ஞானகுரு – சுப்பிரமணியர், பரப்பிரம்ம குரு – பிரம்மா, விஷ்ணு குரு – வரதராஜர், சக்தி குரு – சவுந்தர்யநாயகி, சிவகுரு – தட்சிணாமூர்த்தி என ஏழு குருக்கள் (சப்தகுரு) உள்ளனர்.
இந்த ஏழு குருக்களையும், திருச்சி மண்ணச்சநல்லூர் அருகிலுள்ள உத்தமர்கோவிலில் தரிசிக்கலாம். ஆழ்வார்களால் மங்களாசாசனம் செய்யப்பட்ட திவ்யதேசங்களில் ஒன்றான இந்தக் கோவிலில், பிரம்மாவிற்கு தனி சன்னிதி உள்ளது. நவக்கிரக குரு பகவானின் அதிதேவதை பிரம்மா என்பதால், இங்கு வழிபடுவது குரு பகவானால் உண்டாகும் கெடுபலன்களைக் குறைக்கும்.
சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய மும்மூர்த்திகளும் தங்களது தேவியருடன் காட்சி தரும் அற்புதத்தலம் இது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – YouTube | [email protected]