இலங்கையில் பாரியளவில் போதைப் பொருள் வியாபாரத்தில் ஈடுபட்டுவந்த முக்கிய ஆறு பேரின் பெயர் இன்டர்போலினால், சர்வதேச சிவப்புப் பிடியாணைப் பட்டியலிலிருந்து நீக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பிரசன்ன ஜனக பெர்ணாந்து, விதுர லனாத் டி. சொய்ஷா, சாலிய பெரேரா, சீ நிமல் பத்மசிறி, வசந்த குமார மென்டிஸ் மற்றும் ஜெ. சுஜித் நிஷாந்த ஆகியோரின் பெயர்களே இவ்வாறு நீக்கப்பட்டுள்ளதாகவும் குறிப்பிடப்படுகின்றது.
இவர்களுக்கு எதிராக சர்வதேச பொலிஸாரினால் கண்ட இடத்தில் கைது செய்யவும் என பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
இலங்கை பொலிஸார் இவர்களைக் கைது செய்வதாக கூறியதற்கு இணங்க இவர்களின் பெயர் நீக்கப்பட்டுள்ளதாக இன்டர்போல் பொலிஸார் அறிவித்துள்ளனர்.
இருப்பினும், இதுவரையில் எவரும் கைது செய்யப்படவில்லையென இலங்கை பொலிஸ் தகவல் வட்டாரங்கள் குறிப்பிட்டுள்ளன.