காணாமற்போனதாகக் கூறப்படும் இன்டர்போல் தலைவர் மெங் ஹொங்வெய்யை (Meng Hongwei) தடுத்துவைத்துள்ளதாக சீனா உறுதிசெய்துள்ளது.
ஊழலுக்கு எதிரான விசாரணைக் குழுவினால் அவர் தடுத்துவைக்கப்பட்டுள்ளதாக பெய்ஜிங் தெரிவித்துள்ளது.
இன்டர்போல் எனப்படும் சர்வதேச பொலிஸின் தலைவர் மெங் ஹோங்வெய் கடந்த மாதம் 25 ஆம் திகதி முதல் காணாமறைபோயுள்ளதாக அவரது குடும்பத்தினரால் முறையிடப்பட்டிருந்தது.
மெங் ஹோங்வெய், பிரான்ஸிலுள்ள இன்டர்போலின் தலைமையகத்திலிருந்து கடந்த 25 ஆம் திகதி சீனாவிற்கு சென்றபோதே காணாமற்போனதாக தெரிவிக்கப்பட்டதை அடுத்து, பிரான்ஸ் அரசினால் அவரைத் தேடும் பணிகள் முடுக்கி விடப்பட்டிருந்தன.
இதேவேளை,மெங் ஹோங்வெய், தனது பதவியை இராஜினாமா செய்துள்ளதாக சர்வதேச பொலிஸ் தெரிவித்துள்ளது.
நேற்று அனுப்பப்பட்ட இராஜினாமா கடிதம் உடன் அமுலுக்கு வந்ததாகவும் இன்டர்போல் அறிவித்துள்ளது.