இன்ஸ்டகிராமில் குரவழி(வாயிஸ் மெசேஜ்) பரிமாற்றம் வசதி அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இனி வாட்ஸ் ஆப் போல்வே இன்ஸ்டகிராமிலும் வாயில் மெசேஜ் செய்துக்கொள்ளலாம்.
பேஸ்புக், வாட்ஸ் ஆப், டிவிட்டர், இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களின் பயன்பாடு இன்றைய அளவில் மக்களுக்கு இன்றியமையாத ஒன்றாக மாறிவிட்டது. நண்பர்களில் ஆரம்பித்து நாட்டு தலைவர்கள் வரை தகவல்களை சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.
பேஸ்புக், வாட்ஸ் ஆப் மற்றும் இன்ஸ்டகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்கள் பயனாளிகளை தக்க வைத்துக் கொள்ளும் விதமாக நாளுக்கு நாள் புதிய மாற்றங்களை கொண்டு வருகின்றன. அதன்படி இன்ஸ்டகிராம் வலைதளத்தில் புதிய வசதி ஒன்று ஏற்படுத்தப்பட்டுள்ளது.
வாட்ஸ் ஆப் போலவே, இன்ஸ்டகிராமில் தகவல்களை பரிமாறிக் கொள்ளும் வசதியாக குரல்வழி( வாயிஸ் மெசேஜ் ) பரிமாற்றம் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இது இன்ஸ்டகிராம் பயனாளிகளின் வரவேற்பையும் பெற்று வருகிறது. இதன் காரணமாக இன்ஸ்டாகிராமில் இன்னும் பல பயனாளர்கள் அதிகரிப்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.