இலங்கை அரசின் அரசி யல் போக்கு திசைமாறி வரும் நிலையில் இனியும் பார்த்துக்கொண்டிராமல் உலக நாடுகள் தலையிடவேண்டும் என்று வலியுறுத்தியிருக் கிறது தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு.
”தமிழ் மக்களின் காணிகளில் இராணுவம் தொடர்ந்தும் குடி யிருப்பது நல்லிணக்கத்துக் குச் சாதகமான சமிக்ஞை இல்லை. மக்கள் பொறுமை இழந்துவிட்டார்கள். உலக நாடுகள் இனியும் பார்த்துக் கொண்டிராமல் தலையிட வேண்டும்” என்று ஐக்கிய நாடு கள் சபையின் பொதுச் செயலா ளர்இ ஐ.நா. மனித உரிமைகள் ஆணை யாளர் மற்றும் வெளிநாடுக ளின் தூதுவர்களுக்குத் தான் எழுதிய கடிதத்தில் கூட்ட மைப்பின் தலைவர் இரா. சம் பந்தன் தெரிவித்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் கேப்பாபிலவு மக்கள் தமது காணிகளை இராணுவத்தின் பிடியிலிருந்து விடுவிக்குமாறு கோரி 170 நாள்கள் வீதியிலி ருந்து தொடர் போராட்டம் நடத்தி வருகின்றனர். இந்தக் காணி விடுவிப்புத் தொடர் பில் இரா.சம்பந்தன்இ அரச தலைவருடன் நேரடியாகப் பேச்சு நடத்தியிருந்தார். அதன் பின்பும் காணி விடுவிக் கப்படாததைத் தொடர்ந்து அரச தலைவர்இ பாதுகாப்பு அமைச்சின் செயலர் ஆகியோருக்குக் கடிதங்களை அனுப்பி வைத்திருந்தார். அவற்றுக்கும் உரிய பதில்கள் கிடைக் கவில்லை.
கடந்த 11ஆம் திகதி அரச தலைவருக்கும்இ பாதுகாப்பு அமைச்சின் செயலருக்கும் மிகக் காட்டமான வார்த்தை களைப் பயன்படுத்தி மீண்டும் கடிதம் அனுப்பியிருந்தார். தேவைப்பட்டால் கேப்பாப்பிலவு காணி விடுவிப்புத் தொடர்பில் கூட்டம் நடத்துமாறும் கேட்டிருந்தார். ஆனால் எதுவும் நடக்கவில்லை.
இதற்கிடையே தற்போதைய அரசியல் நிலவரம் குறித் துப் பேசுவதற்காக அரச தலைவரைச் சந்திப்பதற்கு நேரம் ஒதுக்கித் தருமாறும் இரா.சம்பந்தன் அரச தலைவர் மைத்திரிபாலவிடம் கோரியிருந்தார். இரண்டு வாரங்களுக்கு மேலாகியும் அதற்கும் பதில் கிடைக்கப்பெறவில்லை.
எல்லாவற்றுக்கும் மேலாக புதிய அரசமைப்பு ஒன்றை உருவாக்குவதற்கான முயற்சிகளும் பெரும்பான்மைக் கட்சிகள் இரண்டாலும் திட்டமிட்டே பின்தள்ளப்பட்டு வருகின்றன. இவற்றையெல்லாம் அடுத்தே உலக நாடுகள் தலையிட வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார் இரா. சம்பந்தன்.