இந்த விபத்து நடந்திருக்க கூடாது, கமல்ஹாசன் உருக்கமான கருத்து
கமல்ஹாசன் சில தினங்களுக்கு முன் தன் வீட்டு மாடியில் இருந்து கிழே விழுந்தார். இதை தொடர்ந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்றபின், தற்போது முழுநேர ஓய்வில் இருக்கிறார்.
இந்நிலையில் தன் உடல்நிலை குறித்து தானே ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். இதில் ‘எனக்காக கவலைப்படும் நண்பர்களுக்கு, என் உறவிற்கு நிகரான ரசிகர்களுக்கு என்ன செய்ய போகிறேன் என்று தெரியவில்லை.
அத்தனை அன்பு என் மேல் வைத்துள்ளீர்கள், பல விபத்துகளில் இருந்து நான் பாடல் கற்றுள்ளேன், ஆனால், பல பாடம் கற்ற நான் இந்த விபத்தில் மாட்டிக்கொண்டேன்.
இந்த விபத்து நடந்திருக்க கூடாது தான், இருந்தாலும் நல்ல மருத்துவர்களால் தற்போது கொஞ்சம் கொஞ்சமாக குணமாகி வருகிறேன், விரைவில் உங்களை நானே நேரில் சந்திக்கிறேன்’ என்று கூறியுள்ளார்.
கமல் பேசிய ஆடியோ கீழே