இந்த நபரை கண்டீர்களா?
கனடா-ஒரு மில்லியன் டொலர்கள் பெறுமதியான வைரத்தை மோசடி செய்த நபர் ஒருவரை கண்டு பிடிக்க உதவுமாறு பொலிசார் பொது மக்களை கேட்டுள்ளனர்.
61-வயதுடைய மனிதரொருவர் முதலீடு செய்து பல உதிரி மற்றும் வண்ண வைரங்களை சேர்த்தார்.இவற்றை விற்பதற்காக குறிப்பிட்ட சந்தேக நபருடன் ஒழுங்குகளை செய்துள்ளார்.சந்தேக நபரும் தான் ஒரு டாக்டர் என கூறி புதன்கிழமை மாலை சந்திக்க ஒழுங்கு செய்து கீல் வீதி மற்றும் வில்சன் அவெனியு பகுதியில் அமைந்துள்ள உணவகம் ஒன்றில் சந்தித்துள்ளனர்.சந்தேக நபர் காசோலை ஒன்றை கொடுத்து விட்டு வைரத்தை பெற்றுவிட்டார்.
ஆனால் காசோலை போலியானதென உறுதிப்படுத்தப்பட்டது.
புதன்கிழமை மனிதன் பொலிசாரிடம் தெரிவித்துள்ளார்.
சந்தேக நபர் 45-50வயதுடையவர் எனவும் 5.10உயரம் கட்டையான கறுப்பு முடி கொண்டவர் கடைசியாக காணப்பட்ட போது பழுப்பு நிற சட்டையும் இருண்ட காற்சட்டையும் அணிந்திருந்ததோடு கிப்பா எனப்படும் ஒலிவ் நிற விளிம்பற்ற தொப்பியும் அணிந்திருந்ததாக பொலிசார் தெரிவித்துள்ளனர்.
தகவல் தெரிந்தவர்கள் 416-808-3100 அல்லது அனாமதேயமாக 416-222-8477.இலக்கத்தில் தொடர்பு கொள்ளுமாறு பொலிசார் கேட்டுள்ளனர்.