இந்த நடிகர்கள் கடைசியாக ஒரே வருடத்தில் இரண்டு ஹிட் எப்போது கொடுத்தார்கள் தெரியுமா? பார்ப்போம் வாங்க
தமிழ் சினிமாவில் ஒரு நாயகனின் மதிப்பு என்பது அவர் கொடுக்கும் தொடர்ச்சியான ஹிட் வரிசையை பொறுத்து தான். முந்தைய படத்தின் வசூலை வைத்தே அடுத்தடுத்த படங்களின் வியாபாரம் அதிகரிக்கும், அந்த வகையில் தமிழ் சினிமா நடிகர்கள் ஒரே வருடத்தில் இரண்டு ஹிட் படங்களை கொடுத்தது எந்த வருடம்? எந்த படம் என்பதை பார்ப்போம்.
ரஜினிகாந்த்
ரஜினி 3 வருடத்திற்கு ஒரு படம் தான் நடிப்பார், இருந்தாலும் அந்த 3 வருட பாக்ஸ் ஆபிஸை ஒரே வருடத்தில் எடுத்துவிடுவார், அந்த வகையில் 1995ம் வருடம் பாட்ஷா, முத்து என இரண்டு ஹிட் படங்களை கொடுத்தார்.
கமல்ஹாசன்
கமல்ஹாசனும் கிட்டத்தட்ட ரஜினி ஸ்டைல் தான், கடந்த வருடம் கமல்ஹாசனுக்கு 3 படங்கள் திரைக்கு வந்தாலும் இதில் பாபநாசம் மட்டுமே ஹிட் வரிசை, 2004ம் ஆண்டு விருமாண்டி, வசூல்ராஜா MBBS என ஒரே வருடத்தில் இரண்டு ஹிட் படங்களை கொடுத்தார்.
விஜய்
பாக்ஸ் ஆபிஸின் செல்லப்பிள்ளை விஜய், ஆனால், சமீப காலமாக ஒரு படம் ஹிட் கொடுத்தால் மற்றொரு படத்தில் சொதப்பி வருகிறார், இவருக்கு ஒரே வருடத்தில் இரண்டு ஹிட் கிடைத்தது 2005ம் ஆண்டு திருப்பாச்சி, சிவகாசி தான். 2011ம் ஆண்டு வெளிவந்த காவலன், வேலாயுதம் இரண்டுமே ரசிகர்களை கவர்ந்தாலும் ஒரு சில அரசியல் பிரச்சனைகளால் காவலன் தோல்வியை தழுவியது. 2012ல் துப்பாக்கி என்ற மெகா ஹிட் படத்தை கொடுத்தார், அதே ஆண்டு தான் நண்பன் படம் வெளிவந்தது, இந்த படம் ஹிட் என்றாலும் அதிக பட்ஜெட் ஒரு சில இடங்களில் தயாரிப்பாளர் கையை கடித்தது.
அஜித்
அஜித் ஒரு ஹிட் கொடுத்தால் அடுத்த வெற்றிக்கு எப்போதும் சில நாட்கள் எடுத்துக்கொள்வார், அப்படி ஒரு காலம் அவருக்கு, இருக்க மங்காத்தாவிற்கு பிறகு தான் அஜித்தின் மார்க்கெட் ஒரே நேர்க்கோட்டில் செல்கின்றது. கடந்த வருடமே என்னை அறிந்தால், வேதாளம் என அஜித் இரண்டு ஹிட் படங்களை கொடுத்து அசத்தினார்.
விக்ரம்
விக்ரமெல்லாம் ஹிட் கொடுப்பதே பெரும் சாதனை தான், அந்நியன் என்ற படத்திற்கு பிறகு இத்தனை வருடத்தில் அவரு கொடுத்த ஹிட் படங்கள் தெய்வத்திருமகள், ஐ, இருமுகன் மட்டுமே, ஆனால், 2003ம் ஆண்டு இவர் நடிப்பில் தூள், சாமி, பிதாமகன் என ஹாட்ரிக் ஹிட் அடித்தது.
சூர்யா
சூர்யாவும் சில வருடமாக தன் திரைப்பயணத்தில் கொஞ்சம் சறுக்கித்தான் வருகிறார், இவர் கடைசியாக 2009ம் ஆண்டு அயன், ஆதவன் என ஒரே வருடத்தில் இரண்டு ஹிட் கொடுத்தார், ஆதவன் விமர்சனத்தில் பின் வாங்கினாலும் வசூலில் வெற்றி பெற்றது.
தனுஷ்
தனுஷ் கண்டிப்பாக ஒரு ஹிட் கொடுத்து விட வேண்டும் என்ற கட்டாயத்தில் உள்ளார். இந்நிலையில் கடந்த வருடம் அனேகன், மாரி விமர்சனத்தில் பின் சறுக்கினாலும் வசூலில் ஹிட் வரிசையை பிடித்தது, ஆனால், எல்லோருக்கும் பிடித்தது போல் அவர் ஹிட் கொடுத்தது 2003ம் ஆண்டு வந்த காதல் கொண்டேன், திருடா திருடி தான்.
சிவகார்த்திகேயன்
சிவகார்த்திகேயன் நடித்த எந்த படமும் இதுவரை தோல்வியையே சந்தித்தது இல்லை, அந்த வகையில் தற்போது இந்த வருடமே ரஜினி முருகன், ரெமோ என்ற இரண்டு மெகா ஹிட் படங்களை கொடுத்துவிட்டார்.
விஜய் சேதுபதி
விஜய் சேதுபதியும் கிட்டத்தட்ட சிவகார்த்திகேயன் மாதிரி தான், ஆனால், இவர் பார்முலா வேறு, 10க்கு வலைவீசினால் 2வது மாட்டுமல்லவா? என்பது போல் தான், படங்களாக நடித்து வெளியிட்டு வருகிறார், இந்த வருடத்திலேயே சேதுபதி, தர்மதுரை, ஆண்டவன் கட்டளை என 3 ஹிட் படங்களை கொடுத்துவிட்டார்.
சிம்பு
எவ்ளோ தேடியும் கிடைக்கவில்லை, இது நம்ம ஆளு டீசண்ட் ஹிட் ஆகியதால், அடுத்த மாதம் வரும் அச்சம் என்பது மடமையடா ஹிட் ஆகி இந்த லிஸ்டில் இடம்பிடிப்பார் என எதிர்ப்பார்ப்போம்.