மாய மந்திரமின்றிக் காலத்தைக் கடந்து பின்னோக்கிச் சென்றுள்ளனர் பயணிகள் பலர்.
2018ஆம் ஆண்டில் விமானப் பயணத்தைத் தொடங்கியோர் வேறொரு நாட்டில் தரையிறங்கிய போது அங்கு புதிய ஆண்டு இன்னும் பிறக்கவில்லை.
அப்படி 7 விமானங்கள் 2018இல் பயணத்தைத் தொடங்கி 2017இல் பயணத்தை முடித்தன.
FlightRadar24 எனும் இணையத்தளம் அந்தத் தகவல்களை வெளியிட்டது.
உலக அளவில் விமானங்களைக் கண்காணிக்கும் இணையத்தளம், புத்தாண்டு பிறந்த சற்று நேரத்தில் தைவானைவிட்டுக் கிளம்பிய 6 விமானங்கள் குறித்த தகவல்களை அளித்தது.
ஜனவரி முதல் தேதி தைவானின் அனைத்துலக விமான நிலையத்திலிருந்து கிளம்பிய 6 விமானங்கள் வட அமெரிக்காவை டிசம்பர் 31, நள்ளிரவுக்குச் சற்று முன்னர் அடைந்தன.
ஹவாயியன் ஏர்லைன்ஸ் நிறுவனத்தின் விமானம் 446 தாமதத்தின் காரணமாக நியூஸிலந்திலிருந்து நள்ளிரவைத் தாண்டிக் கிளம்பியது.
காலை 10.16க்கு அது ஹானலுலுவைச் சேர்ந்தபோது அங்கு இன்னும் 31 டிசம்பராக இருந்தது.