இந்தோனேசியாவின் சுலாவேசி மாகாணத்தில் சட்டவிரோதமாக இயங்கி வந்த தங்க சுரங்கத்தில் ஏற்பட்ட சரிவில் உயிரிழந்தோரின் எண்ணிக்கை 27 ஆக அதிகரித்துள்ளது.
முறையான உரிமம் பெறாமல் இயங்கி வந்த இந்தோனேசியாவின் போலாங் மோங்கோண்டவ் நகர தங்க சுரங்கம் கடந்த மாதம் 26ம் திகதி சரிந்து விழுந்தது. அதன் போது பணியில ஈடுபட்டிருந்த ஏராளமான தொழிலாளர்கள் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தனர்.
இதில் 3 பேர் உயிரிழந்ததாகவும் 13 பேர் மீட்கப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல் வெளியானது. தொடர்ந்து நடந்த மீட்புப் பணிகளில் மேலும், 14 பேரின் உடல்கள் மீட்கப்பட்டன.
இந்நிலையில், சுரங்கத்தில் ஏற்பட்ட நிலச்சரிவில் சிக்கி பலியானோர் எண்ணிக்கை 27 ஆக உயர்ந்துள்ளது என மீட்புக் குழுவினர் தெரிவித்துள்ளனர். மேலும், உடல்களை மீட்கும் பணிகள் நிறுத்தப்பட்டுள்ளது என தெரிவிக்கப்பட்டுள்ளது.