இந்தோனேஷியாவின் கடற்கரை பகுதியில் 6.6 ரிச்டர் அளவுகோலில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.
மொலுக்கா கடலுக்கடியில் சுமார் 108 மைல் தொலைவில் மையம் கொண்டு இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாக புவியியல் ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நிலநடுக்கத்தால் கட்டிடங்கள் குலுங்கியதால், அச்சமடைந்த மக்கள் வீடுகளை விட்டு வெளியே வந்து வீதிகளில் தஞ்சம் அடைந்தனர் என்றும் அந்நாட்டு செய்திகள் தெரிவிக்கின்றன.
மேலும் இதற்கு முன்னர் நிலநடுக்கத்தின் அளவு 7.0 அளவு ரிச்ட்டரில் பதிவாகியதாகவும் புவியியல் ஆய்வு மையம் அறிவித்தது.
இருப்பினும் இந்த நிலநடுக்கத்தின் காரணமாக எவ்வித சுனாமி அச்சுறுத்தலும் இல்லை என பசிபிக் சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
அத்தோடு ஏற்கனவே ஆழிப்பேரலையால் ஏற்பட்ட வடுக்கள் இந்தோனேஷியாவில் மாறாத நிலையில் மீண்டும் இந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளமையால் மக்கள் தொடர்ந்தும் அச்சத்தில் உள்ளனர் என்பதும் குறிப்பிடத்தக்கது.