அராபுரா கடலில் படகு மூழ்கியதில் காணாமல்போன 15 மீனவர்களை மீட்புப் படையினர் தொடர்ந்து தேடி வருவதாக இந்தோனேசிய அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
கடந்த சனிக்கிழமையன்று குறித்த படகு 25 மீனவர்களுடன் பயணம் செய்து கொண்டிருந்த போது மோசமான வானிலையின் காரணமாக பெரும் அலைகளால் தாக்கப்பட்டு விபத்துக்குள்ளாகியுள்ளது.
இந்நிலையில், தகவல் கிடைத்ததும் மீட்புக்குழு தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.
பத்து பேர் மீட்கப்பட்டுள்ளதோடு, 15 பேர் காணாமல் போயுள்ளனர். தேடுதல் பணியில் இந்தோனேசிய விமானப்படையின் விமானம் ஈடுபடுத்தப்பட்டுள்ளது.
இன்று, கடற்படையின் போர்க்கப்பலும் சம்பவ இடத்திற்கு அனுப்பப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
மீன்பிடிப் படகு ஜூன் 24 அன்று மலுகு மாகாணத்தின் கெபுலாவான் அரு (அரு தீவுகள்) மாவட்டத்தின் தலைநகரான டோபோவில் உள்ள துறைமுகத்தில் இருந்து புறப்பட்டது என தெரிவிக்கப்பட்டுள்ளது.