இந்து பண்பாட்டு நிதியத்திற்கு பிரதமரினால் உறுப்பினர்கள் நியமிப்பு. புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் என்ற ரீதியில் பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் இன்று (17) அலரி மாளிகையில் இந்து பண்பாட்டு நிதியத்திற்கான உறுப்பினர்களை நியமித்தார்.
இந்து சமய மற்றும் கலாசார நடவடிக்கைகளை ஊக்கப்படுத்தி மேம்படுத்துவதற்காக இலங்கை பாராளுமன்றத்தின் 1985 ஆம் ஆண்டு 31ஆம் இலக்க சட்டம் மூலமாக இந்து பண்பாட்டு நிதியம் உருவாக்கப்பட்டுள்ளது.
இந்நிதியத்தின் புதிய தலைவராக புத்தசாசன, மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்கள் நியமிக்கப்பட்டதுடன், இந்து பண்பாட்டு நிதியம் எட்டு உறுப்பினர்களைக் கொண்டுள்ளது.
புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சின் செயலாளர் பேராசிரியர் கபில குணவர்தன அவர்கள் மற்றும் இந்து சமய, கலாசார அலுவல்கள் திணைக்களத்தின் பணிப்பாளர் திரு.அ.உமாமகேஸ்வரன் மற்றும் உதவிப் பணிப்பாளர் திருமதி.கு.ஹேமலோஜினி ஆகியோர் பதவி வழியாக நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும் முன்னாள் புனர்வாழ்வு இராஜாங்க அமைச்சின் செயலாளர் திருமதி.சாந்தி நாவுக்கரசன், மயூரபதி ஸ்ரீ பத்திரகாளி அம்மன் ஆலய அறங்காவலர் சபைத் தலைவர் திரு.பெ.சுந்தரலிங்கம், ஜிந்துப்பிட்டி ஸ்ரீ சிவசுப்பிரமணிய சுவாமி ஆலய அறங்காவலர் சபைச் செயலாளர் திரு. ஜி.வீ. சுப்பிரமணியன், தொழிலதிபர்களான தேசமான்ய துரைச்சாமி விக்னேஸ்வரன், திரு. ஏ.பி.ஜெயராஜ் ஆகியோர் கௌரவ பிரதமரினால் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர்.