பாகிஸ்தானை பற்றி அமெரிக்க அதிபர் டிரம்ப் இந்திய பாஷையில் (மொழி) விமர்சித்துள்ளார் என பாக். அமைச்சர் குற்றம்சாட்டி பேசினார்.
“பயங்கரவாதத்தை ஒழிப்பதற்காக பாகிஸ்தானுக்கு, கடந்த, 15 ஆண்டுகளில், அமெரிக்க அரசுகள் முட்டாள்தனமாக, 2.10 லட்சம் கோடி ரூபாய் நிதியுதவியை அளித்துள்ளன. ஆனால் நடவடிக்கை எடுக்காமல், பொய் சொல்லி, பயங்கரவாதிகளுக்கு புகலிடம் அளித்து வரும் பாகிஸ்தானுக்கு இனி நிதி உதவி கிடையாது,” என, அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்ப் அதிரடியாக அறிவித்தார்.
இதற்கு பாக். தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். இந்நிலையில் டிரம்ப் அறிக்கை குறித்து தேசிய பாதுகாப்பு தொடர்பாக பார்லி. கமிட்டி கூட்டம் நடந்தது. இதில் கலந்து கொண்டு பாக். வெளியுறவு அமைச்சர் குவாஜா ஆசிப் பேசியது, ஆப்கானிஸ்தானில் பயங்கரவாதத்தை ஒடுக்கும் விஷயத்தில் அமெரிக்கா தோல்வியுற்றதற்கு பாகிஸ்தானை பலிகடாவாக்க பார்க்கிறது. அமெரிக்க அதிபர் டெனால்ட் டிரம்ப் உள்ளிட்ட அந்நாட்டு தலைவர்களின் விமர்சனம் உண்மைக்கு முரணாக, இந்திய பாஷை (மொழி) யில் உள்ளன என்றார்.