இந்திய – மலையாள சினிமாவின் சூப்பர் ஸ்டார் நடிகர் மம்மூட்டியுடனான திரைப்படத்தில் இலங்கை கலைஞரொருவர் பங்கேற்றுள்ளதாக தெரியவருகிறது.
கடுகண்ணாவை – ஒரு யாத்திரை குறிப்பு திரைப்படத்தின் படப்பிடிப்பிற்காக நடிகர் மம்மூட்டி அண்மையில் இலங்கைக்கு வந்திருந்தார்.
இந்த நிலையில் திரைப்படத்திற்கான படப்பிடிப்பு நடவடிக்கைகள் இடம்பெற்று வரும் நிலையிலேயே அதில், மிக முக்கியமான கதாபாத்திரத்தில் இலங்கை கலைஞரான ஷியா உல் ஹசன் நடித்துள்ளார்.
ரஞ்ஜித் பாலகிருஷ்ணனின் இயக்கத்தில் இந்த திரைப்படம் தயாரிக்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.




