இந்தியாவில் தயாரிக்கப்பட்ட நவீன ரக கப்பல் இலங்கை கடற்படையினரிடம் கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி தலைமையில் நடைபெற்றது.
இதற்கான நிகழ்வு கொழும்பு துறைமுகத்தின் கிழக்கு பகுதியிலுள்ள கொள்கலன் பிரிவில் நேற்று (02) மாலை 4.00 மணிக்கு இடம்பெற்றது.
இந்த கப்பல் கடற்பாதுகாப்பு , அவசர தேவைகள் , மனிதாபிமான உதவிகள், அனர்த்த நடவடிக்கை, கடல் முறைகேடுகளைத் தடுத்தல் போன்றவற்றுக்கு பயன்படுத்தப்படவுள்ளது.
மணித்தியாலத்திற்கு 12 க்கும் 14 க்கும் இடைப்பட்ட கடல்மைல் தூரத்திற்கு செல்லக்கூடிய ஆற்றலை இந்த கப்பல் கொண்டுள்ளது. இந்த கப்பலில் நவீன சிறிய ரக ஹெலிகப்டர் இறங்குதரை வசதிகளும் உள்ளது.
“சயுரல” எனும் பெயரிலான இக்கப்பல் கடந்த 28 ஆம் திகதி கொழும்புக்கு வந்தடைந்ததாக குறிப்பிடப்படுகின்றது.