அமெரிக்காவில், கொலை வழக்கில் சிக்கி, மரண தண்டனை விதிக்கப்பட்ட இந்தியருக்கு, பிப்., 23ல் தண்டனை நிறைவேற்றப்பட உள்ளது.
ஆந்திராவைச் சேர்ந்தவர் ரகுநந்தன் யண்டமூரி, 32. இவர், அமெரிக்காவின் பென்சில்வேனியா மாகாணத்தில், மென்பொறியாளராக பணியாற்றி வந்தார்.
இந்நிலையில், 2014ல், 61 வயதான இந்திய பெண்மணியையும், அவரது பேத்தியையும் கடத்தி கொலை செய்தார். பணத்துக்காக நடந்த இந்தக் கொடூரக் கொலையில், ரகுநந்தனுக்கு மரண தண்டனை கிடைத்தது.
இதையடுத்து, பிப்ரவரி 23ல், இவருக்கு விஷ ஊசி மூலம் மரண தண்டனை நிறைவேற்றப்படும் என, பென்சில்வேனியா சிறைத் துறை அறிவித்துள்ளது.
2015 முதல், மரண தண்டனை நிறைவேற்ற, பென்சில்வேனியா கவர்னர், தற்காலிகத் தடை விதித்திருந்தார். இதன் அடிப்பபடையில், ரகுநந்தனின் தண்டன நிறுத்தி வைக்கப்படலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.