இந்தியாவுக்கு வர ஆசைப்படுவதாகஅமைதிக்கான நோபல் பரிசு வென்ற மலாலா,20, தெரிவித்தார்.
பெண் குழந்தைகள் கல்விகற்க பள்ளிக்குச்செல்வதற்கு விதிக்கப்பட்ட தடையை எதிர்த்து குரலெழுப்பியதால் 15 வயதில் பாகிஸ்தானில் தலிபான் பயங்கரவாதிகளின் தாக்குதலுக்குஆளானார் மலாலா.
தற்போது பிரிட்டனில் வசித்துவரும் மலாலா, ஸ்விட்சர்லாந்தின் டாவோஸ் நகருக்குஉலகப் பொருளாதார மாநாட்டில் பங்கேற்பதற்காக வந்திருந்தார்.
அவர் கூறியதாவது:இந்தியாவும், பாகிஸ்தானும் முன்பு ஒரேதேசமாகத்தான் இருந்தன.
ஒரே கலாசாரத்தையே பின்பற்றி வருகிறோம். இருநாடுகளிலும் நிலவும் பிரச்னையும் ஒரே மாதிரியானவை.இந்தியாவிலிருந்து எனக்கு அதிக ஆதரவு கிடைத்தது. இந்தியர்கள் அனைவருக்கும் நன்றி. அந்நாட்டில் இருந்து எனக்கு அதிக கடிதங்கள் அனுப்பப்பட்டன.
அவற்றில் ஒரு சிறுமியால் எழுதப்பட்ட கடிதம் என்னை மிகவும்நெகிழச் செய்தது.அந்தக் கடிதத்தில், “ஒரு நாள் நாம் இருவரும் நமது தேசங்களின் பிரதமர்கள் ஆகிவிடுவோம்.
அப்போது, நாம்பேச்சுவார்த்தை நடத்தி இருநாடுகளுக்கும் இடையே அமைதியைக் கொண்டு வருவோம்,’ என்று குறிப்பிட்டிருந்தார்.
கல்வி ஒன்றை மட்டும் பெண்கள் எதிர்பார்க்கவில்லை. அவர்கள், பிரதமராகவும், குடியரசுத் தலைவராகவும் வர வேண்டும் என்று லட்சியம் கொண்டிருக்கிறார்கள்.
இந்திய சினிமாக்களை நான் ரசித்திருக்கிறேன். ஹிந்தியும் தெரியும். பாகிஸ்தானில் மட்டுமல்ல; இந்தியாவிலும் பெண் கல்வி குறித்து நான் கவலைப்படுகிறேன்.
இரு நாடுகளின் எதிர்காலம் குறித்து நாம் சிந்திக்கும்பட்சத்தில், பெண் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும். அவர்கள்தான் எதிர்காலம்.அவர்களுக்கு கல்வியை கொடுக்காமல் சிறந்த எதிர்காலத்தை நம்மால் எப்படி உருவாக்க முடியும்.
இவ்வாறு அவர் கூறினார்.