இந்தியாவும், சீனாவும் சிறந்த நண்பர்களாகவும், இருக்க முடியும் என சீன அதிபர் ஜி ஜிங்பிங் கூறியுள்ளார்.
முன்னுதாரணம்
வுஹான் நகரில் பிரதமர் மோடியை சந்தித்த சீன அதிபர் கூறுகையில், உலகளவில் வளரும் நாடுகள் மற்றும் 100கோடிக்கு மேல் மக்கள் தொகையுடன் பெரிய சந்தை கொண்ட பொருளாதார நாடுகளான இந்தியாவும், சீனாவும், தாராளமயமாக்கப்பட்ட பொருளாதாரத்தின் முதுகெலும்பாக உள்ளன. உலகத்தின் நிலைத்தன்மைக்கு, சீனா – இந்தியா இடையில் சிறந்த உறவு முக்கியமானது. இதன் மூலம் அனைவரின் வளர்ச்சிக்கு சிறந்த முன்னுதாரணமாக இருக்கும்.
பங்களிப்பு
வளர்ச்சி, பரஸ்பர ஒத்துழைப்பு ஆகியவற்றில் நாம் முக்கியத்துவம் செலுத்தி , உலகத்தின் அமைதி மற்றும் வளர்ச்சிக்கு பங்களிப்பை அளிக்க வேண்டும். இந்தியாவும், சீனாவும் சிறந்த நண்பர்களாகவும், உறவினர்களாகவும் இருக்க முடியும். இரு நாடுகளும் ஒருவருக்கொருவர் மதித்து நடப்பதுடன், தனது வளர்ச்சிக்கான கனவை எட்டுவதற்காக கூட்டாளிகளாக கருத வேண்டும் என்றார்.