இந்தியா அளவில் எஸ்.பி.பிக்கு கிடைத்த மாபெரும் கெளரவம்
தென்னிந்தியா அளவில் தன் குரலால் பலரை ஈர்த்தவர் எஸ்.பி. பாலசுப்ரமணியம். இவருக்கு கிடைக்காத விருதே கிடையாது, பல முறை தேசிய விருது வாங்கிய மாபெரும் பாடகர். இன்றும் தமிழ் சினிமாவின் உச்ச நட்சத்திரமான ரஜினி, கமலுக்கு இவருடைய குரலில் தான் அறிமுக பாடல்.
இவரின் இத்தனை ஆண்டு பணியை பாராட்டி மத்திய அரசு எஸ்.பி.பி க்கு பிலிம் பெர்சனாலிட்டி விருதை வழங்கி கௌரவப்படுத்தியுள்ளது.
கோவாவில் நடக்கும் 47வது சர்வேதச திரைப்பட விழாவில் அவருக்கு இந்த விருது வழங்கப்படும் என்று மத்திய அமைச்சர் வெங்கையா நாயுடு அறிவித்தார்.