இந்தியாவுக்கு எதிராக அணு ஆயுதங்களை தாங்கிய ஏவுகணையை பயன்படுத்த திட்டமிட்டதாக பாகிஸ்தான் முன்னாள் அதிபர் முஷாரப் கூறியுள்ளார்.இது தொடர்பாக ஜப்பானிய பத்திரிகை ஒன்றுக்கு முஷாரப் அளித்த பேட்டி: கடந்த 2001 ல் இந்திய பார்லிமென்டில் பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தியதை தொடர்ந்து இரு நாடுகளுக்கு இடையே பதற்றம் உச்சகட்டத்தை அடைந்தது. இதனையடுத்து கடந்த 2002ல் அணுஆயுதம் தாங்கிய ஏவுகணையை பயன்படுத்துவது பற்றி சிந்தித்தேன். ஆனால், இந்தியாவும் திருப்பி தாக்கும் என்ற அச்சம் காரணமாக இந்த முடிவை கைவிட்டேன்.அப்போது, இந்தியாவும், பாகிஸ்தானும் அணு ஆயுதங்களை பயன்படுத்த முடிவு செய்திருந்தால், ஏவுகணையில் அணு ஆயுதத்தை பொருத்தி தாக்குதல் நடத்த 2 நாட்கள் ஆகியிருக்கும். ஏவுகணையில் அணு ஆயுதத்தை பொருத்துவது பற்றி நாங்களும் சிந்திக்கவில்லை. இந்தியாவும் அது பற்றி சிந்திக்கவில்லை. இதற்கு கடவுளுக்கு தான் நன்றி தெரிவிக்க வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.