இந்தியாவுக்கு வழங்கி வரும் வர்த்தகத்துக்கான முன்னுரிமை அந்தஸ்தை இரத்துச் செய்ய அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தீர்மானித்துள்ளார்.
கடந்த 42 ஆண்டுகளாக வழங்கிவந்த வர்த்தக சலுகையே இவ்வாறு இரத்துச் செய்யப்படவுள்ளதாக ஜனாதிபதி ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
அந்தவகையில், சுங்க வரிகள் எவையுமின்றி பல பில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியில் இந்தியாவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களை நிறுத்துவதற்கு ட்ரம்ப் முடிவு செய்துள்ளார்.
அமெரிக்காவிலிருந்து இறக்குமதி செய்யப்படும் பொருட்களுக்கு இந்தியா மிக அதிகளவிலான வரியை விதிப்பதுடன் இந்திய சந்தைக்கான அமெரிக்காவின் நியாயமான அணுகுமுறைகளை உறுதிசெய்வதற்கு அந்நாட்டு அரசாங்கம் தவறிவிட்டதாகவும் அமெரிக்க பாராளுமன்றத்துக்கு எழுதியுள்ள கடிதத்தில் ட்ரம்ப் இதனைத் தெரிவித்துள்ளார்.