அமெரிக்க அதிபராக, டொனால்டு டிரம்ப், இந்தாண்டு ஜனவரியில் பொறுப்பேற்ற பின், இந்தியாவுக்கான அமெரிக்கத் துாதராக இருந்த, ரிச்சர்ட் வர்மா, ராஜினாமா செய்தார்.
இந்த பதவிக்கு, கென்னத் ஜஸ்டரை நியமிக்க, அமெரிக்க பார்லிமென்ட் ஒப்புதல் அளித்துள்ளது.
இந்தியா – அமெரிக்கா இடையே அணுசக்தி ஒப்பந்தம் உருவாவதில், ஜஸ்டர் முக்கிய பங்கு வகித்துள்ளார். இரு நாடுகளும் இணைந்து நடத்தும் சர்வதேச தொழில்முனைவோர் மாநாடு, ஐதராபாதில், இம்மாத இறுதியில் நடக்க உள்ளது.
அதில், அமெரிக்க அதிபரின் ஆலோசகரும் அவருடைய மகளுமான, இவாங்கா டிரம்ப் தலைமையிலான குழு பங்கேற்க உள்ளது. அதனால், ஜஸ்டர், விரைவில் பதவியேற்பார் என, எதிர்பார்க்கப்படுகிறது.