இந்தியாவில் நாளை மறுதினம் குண்டுவெடிக்கும் – மிரட்டிய அமெரிக்கா
வரும் 15-ஆம் தேதி 70-ஆவது இந்திய சுதந்திர தின விழா நாடு முழுவதும் கொண்டாடப்பட உள்ளது. பொதுவாக பலத்த பாதுகாப்புடன் கொண்டாடப்படும் சுதந்திர தின விழாவுக்கு இந்த முறை அமெரிக்காவில் இருந்து ஒரு மிரட்டல் தொலைபேசி அழைப்பு வந்துள்ளது.
சுதந்திர தினம் என்றால் நாடு முழுவதும் உசார் நிலையில் பாதுபாப்புடன் இருக்கும். எந்தவித அசம்பாவித சம்பவங்களும் நடைபெறக்கூடாது என தீவிரமாக இருக்கும் அரசு இயந்திரம்.
இந்நிலையில் கடந்த 11-ஆம் தேதி இரவு நொய்டாவில் இருக்கும் அமித் என்பவருக்கு ஒரு போன் கோல் வந்துள்ளது. அதில் மறுமுனையில் பேசியவர் வரும் 15-ஆம் தேதி டெல்லி மற்றும் நொய்டாவில் குண்டுகள் வெடிக்கும் என கூறிவிட்டு இணைப்பை துண்டித்துள்ளார்.
இது குறித்து காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது. காவல்துறையின் விசாரணையில் அந்த வெடிகுண்டு மிரட்டல் போன் கோல் அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரில் இருந்து வந்தது தெரியவந்துள்ளது.
இந்த அழைப்பு போலி அழைப்பாக இருக்கலாம் என கூறும் காவல்துறை, இந்த விஷயத்தில் அஜாக்கிரதையாக இருக்க மாட்டோம் என கூறியுள்ளனர். இதனையடுத்து டெல்லி மற்றும் நொய்டாவில் போலிசார் உஷார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.