காஷ்மீர் விவகாரத்தில், இந்தியாவுடனான ராஜீய உறவுகளைத் துண்டித்துள்ள பாகிஸ்தான், டெல்லி – அடாரி இடையே பயணித்துக் கொண்டிருந்த சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் சேவையை நிறுத்தியுள்ளது.
இனி, பாகிஸ்தானில், இந்திய திரைப்படங்கள் திரையிடப்பட மாட்டாது என்றும் அறிவித்துள்ளது. சிம்லா ஒப்பந்தத்தின் பயனாக, இந்தியா-பாகிஸ்தான் இடையே, 1976ஆம் ஆண்டு முதல், சம்ஜவுதா எக்ஸ்பிரஸ் ரயில் இயக்கப்படுகிறது.
டெல்லியில் இருந்து அட்டாரி வரை இயக்கப்பட்டு வந்த ரயில் சேவையை, பாகிஸ்தான் தற்போது நிறுத்தியிருக்கிறது. இந்நிலையில், பாகிஸ்தானில் இந்திய திரைப்படங்கள் இனி திரையிடப்பட மாட்டாது என, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கானின் சிறப்பு உதவியாளர் பிர்தோஸ் ஆஷிக் அவான் தெரிவித்திருக்கிறார்.
இந்தியாவுடனான தூதர உறவனை துண்டிக்க பாகிஸ்தான் பாதுகாப்பு கவுன்சில் முடிவு செய்த நிலையில், அடுத்தடுத்த அறிவிப்புகளை பாகிஸ்தான் அரசு வெளியிட்டு வருகிறது.