பாக்., பயங்கரவாதி மசூத் அசாரை சர்வதேச பயங்கரவாதியாக அறிவிக்கும் முயற்சிக்கு சீனா முட்டுக்கட்டை போடுகிறது என்ற இந்தியாவின் குற்றச்சாட்டுக்கு சீனா மறுப்பு தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்நாட்டு வெளியுறவு செய்திதொடர்பாளர் தெரிவித்ததாவது: இந்தியா கூறுவது போல் மசூத் அசார் விவகாரத்தில் எந்த குறுகிய அரசியல் ஆதாயங்களும் சீனாவுக்கு இல்லை. எங்கள் தரப்பு நியாயத்தின்படியே நாங்கள் செயல்படுகிறோம். உலக நாடுகளில் அமைதி நிலவ சீனா தொடர்ந்து பாடுபடும். இவ்வாறு அவர் தெரிவித்தார்.