எல்லா நாடுகளுடனும் நெருங்கிய உறவைப் பேணிய நிலையில், தமக்கு இந்தியாவினால் எந்த வித அழுத்தமும் கொடுக்கப்படவில்லை என முன்னாள் ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஊடகங்களுக்கு நேற்று(26.07.2023)கருத்து தெரிவிக்கும் போது இதனை கூறியுள்ளார்.
மேலும், தனிப்பட்ட முறையில் பிரதமர் மோடியோ அல்லது இந்திய அரசோ என்னை வற்புறுத்தவில்லை என்று அவர் தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டுறவு
இந்தியா, சீனா, ரஸ்யா, அமெரிக்கா, ஜப்பான் அல்லது ஜெர்மனி என, அனைத்து நாடுகளுடனும் நான் நெருங்கிய உறவைப் பேணி வந்ததாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
நாடுகளுடனான நல்லுறவு அரசியல் தலைவர்கள் கொண்டிருக்க வேண்டிய கலை என மைத்ரிபால சிறிசேன குறிப்பிட்டுள்ளார்.