சாம்பியன்ஸ் லீக் தொடர் கடந்த ஜூன் மாதம் 1-ஆம் திகதி முதல் இங்கிலாந்தில் நடைபெற்று வருகிறது. இதில் இங்கிலாந்து, ஆஸ்திரேலியா, இந்தியா, தென் ஆப்ரிக்கா, நியூசிலாந்து, இலங்கை, பாகிஸ்தான், வங்கதேசம் உள்ளிட்ட 8 அணிகள் பங்கேற்கின்றன.
இத்தொடரின் முதல் லீக் போட்டியில் இந்திய அணி, பாகிஸ்தான் அணியை வீழ்த்தியது. இதைத் தொடர்ந்து நேற்று இலங்கை அணியிடம் மோதிய இந்திய அணி, அதிக ஓட்டங்கள் குவித்தும், பரிதாபமாக தோல்வியை சந்தித்தது.
இந்திய அணியின் தோல்விக்கு முக்கிய காரணம் ரவிச்சந்திரன் அஸ்வின் இல்லாதது தான் என்றும், அவர் இலங்கை அணிக்கு எதிராக நல்ல ரெக்கார்டு வைத்துள்ளார்.
இருந்த போதும் அவரை ஏன் இலங்கை அணிக்கு எதிரான போட்டியில் இறக்கவில்லை என்ற கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது.
இந்நிலையில் இந்திய அணி, இங்கிலாந்து மண்ணில் சுமார் 38 ஆண்டுகளுக்கு பின் இலங்கை அணியிடம் தோல்வியை சந்தித்துள்ளது.
முன்னதாக கடந்த 1979-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 16-ஆம் திகதி இங்கிலாந்தில் நடந்த ஒருநாள் போட்டியில், இலங்கை அணி, இந்திய அணியை 47 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வீழ்த்தியது.
அதன்பின் கடந்த 1999 முதல் 2013 வரை, இந்திய அணி, இலங்கை அணியை இங்கிலாந்து மண்ணில் 5 முறை எதிர் கொண்டுள்ளது. இதில் அனைத்திலும் இந்திய அணியே வெற்றி பெற்றுள்ளது.
இந்த வெற்றியின் மூலம் இலங்கை அணி 38 வருட தாகத்தை தற்போது தணித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.