இலங்கை கடற்பரப்புக்குள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டதாக தெரிவித்து தலைமன்னார் கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்களை தொடர்ந்து விளக்கமறியல் வைக்குமாறு மன்னார் நீதிவான் நீதிமன்றம் உத்தரவிட்டது.
கைதுசெய்யப்பட்டிருந்த 5 இந்திய மீனவர்கள் இழுவைப்படகு ஒன்றில் மீன்பிடி யில் ஈடுபட்டுக் கொண்டிருந்தபொழுது இலங்கை கடற்படையினரால் கைதுசெய்யப்பட்டனர். இம் மீனவர்களை கடந்த வெள்ளிக்கிழமை மன்னார் நீதிவான் நீதிமன்றில் நீதிபதி ஆசீர்வாதம் கிறேசியன் அலெக்ஸ்ராஜா முன்னிலையில் மீண்டும் ஆஜர்படுத்தப்பட்டபோது இவர்களை எதிர்வரும் 11 ஆம் திகதிவரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறும் அவர்க ளில் இரு சிறுவர்களை அன்னை இல்லத்தில் தங்கவைக்கும்படி உத்தரவிட்டார்.