இத்தாலி நிலநடுக்கம்: 16 நாட்களுக்கு பிறகு மீட்கப்பட்ட உயிர்..! நெகிழ வைக்கும்
இத்தாலியில் கடந்த ஆகஸ்ட் மாதம் 24ம் திகதி 6.2 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இதனால் பல பகுதிகளில் கட்டிடங்கள் தரைமட்டமாகின, இதில் 295 பேர் உயிரிழந்தனர். பாதிக்கப்பட்ட பகுதிகளில் இன்னும் மீட்புப்பணிகள் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில், Amatrice நகரத்தில் தீயணைப்பு வீரர்கள் மீட்புபணியில் ஈடுபட்டு கொண்டிருந்த போது கட்டிட இடிபாடு குவியலிருந்து மியாவ், மியாவ் என பூனை கத்தும் சத்தம் கேட்டுள்ளது.
இதனைதொடர்ந்து கவனமாக செயல்பட்ட தீயணைப்பு வீரர்கள் இடிபாடு குவியலில் சிக்கி 16 நாட்கள் உயிருடன் இருந்த பியட்ரோ என்னும் பூனையை மீட்டனர்.
நிலநடுக்கத்தை தொடர்ந்து மழை பெய்து வருவதால் பூனை மழை நீரை குடித்து இத்தனை நாள் உயிர் வாழ்ந்து இருக்கலாம் என கூறப்படுகிறது.
மீட்கப்பட்ட பூனை தற்போது கால்நடை மருத்துவமனையில் தீவிர சிகிச்கை பெற்று வருகிறது.