இத்ததாலி சென்றுள்ள பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவுக்கு எதிராக அந்நாட்டின் போலோக்னா நகரத்தில் ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டுள்ளது.
உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்களுக்கு நீதி கோரி இலங்கையர்கள் கறுப்பு கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இந்த ஆர்ப்பாட்டத்தில் இத்தாலிக்கு மேலதிகமாக, பிரான்ஸ், ஜேர்மனி மக்கள் உட்பட அந்த இடத்திற்கு சென்றுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
எதிர்காலத்தில் வத்திக்கானுக்கு செல்ல தயாராக இருப்பதாக இலங்கையர்கள் தெரிவித்துள்ளனர். அத்துடன், “பாதிக்கப்பட்ட மக்களுக்கு நீதி வேண்டும். இங்கு கூடியிருக்கும் மக்கள் இன, மத, பேதம் பாராமல் கூடியுள்ளனர். அவர்களுக்கான நியாயம் நிலைநாட்டப்பட வேண்டும்” என பிரான்ஸில் இருந்து வந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
நாங்கள் கோரும் நீதி நியாயம் இன்னமும் கிடைக்கவில்லை. உரிய முறையில் விசாரணைகள் இடம்பெறவில்லை. சட்டவிரோத செயல்கள் மாத்திரமே இலங்கையில் இடம்பெறுகின்றன.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல் போன்ற ஒரு சம்பவம் மீண்டும் இலங்கையில் இடம்பெற்று விடக்கூடாது. மத ரீதியான எவ்வித எதிர்ப்பும் வெளியிடவில்லை. நாங்கள் அந்த மக்களுக்காக நியாயமான விசாரணை ஒன்றை விரைவாக மேற்கொண்டு நீதி வழங்க வேண்டும் என்றே கோரிக்கை விடுகின்றோம்” அவர் குறிப்பிட்டுள்ளார்.