இத்தாலியில் பயங்கர ரயில் விபத்து: பலி எண்ணிக்கை 20 ஆக அதிகரிப்பு!
இத்தாலியில் இடம்பெற்ற ரயில் விபத்தில் 20 பேர் பலியாகியுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பயணிகள் ரயிலே இவ்வாறு விபத்துக்குள்ளாகியுள்ளது.
சம்பவ இடத்திற்கு தீயணைப்பு படையினர் மற்றும் ஆம்புலன்ஸ் ஆகியவை விரைந்து சென்று மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளன.
இந்த விபத்துக்கான காரணம் இதுவரையிலும் கண்டறியப்படவில்லை என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
இந்த சம்பவம் கவலையளிக்கும் விடயமாக உள்ளது என இத்தாலியின் பிரதமர் தெரிவித்துள்ளார்.