இலங்கைக்கான இத்தாலியத் தூதுவர் போலோ அண்டரியா பார்டோரெல்லி, பாதுகாப்பு இராஜங்க அமைச்சர் ருவன் விஜயவர்தனவை நேற்றுச் சந்தித்தார்.
பாதுகாப்பு அமைச்சில் நடைபெற்ற சந்திப்பில், இரண்டு நாடுகளுக்கும் இடையிலான நட்புறவு ரீதியான பாதுகாப்புத் திட்டங்கள் தொடர்பில் கலந்துரையாடப்பட்டன.
இருவரும் நினைவுச் சின்னங்களைப் பரிமாறிக் கொண்டனர் எனக் கூறப்பட்டது.