இத்தாலியத் தலைநகர் ரோம் நகர மேயராக, வர்ஜீனியா ராக்கி தேர்வு- ரோமின் முதல் பெண் மேயர்
இத்தாலியத் தலைநகர் ரோமில் உள்ள வாக்காளர்கள், தங்களில் முதல் பெண் மேயரை தேர்ந்தெடுத்துள்ளனர்.
நடைபெற்ற தேர்தல்களில், ஆளும் அமைப்புகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் இயக்கமான, ஐந்து நட்சத்திர இயக்கத்தின் வெர்ஜீனியா ராக்கி, தனது எதிராகப் போட்டியிட்ட ரோபர்டோ கியசெட்டியை திடமாக தோற்கடித்துள்ளார்.
கியாசெட்டி இத்தாலி பிரதமர் மாட்டியோ ரென்சியின் மைய-இடதுசாரி, ஜனநாயகக் கட்சியை சேர்ந்தவர்.
இந்த ஜனநாயகக் கட்சி துரின் நகர மேயர் போட்டியிலும் தோல்வியை கண்டுள்ளது ஆனால் அதன் பிரிதிநிதிகள் மிலன் மற்றும் போலோக்னாவில் தங்களின் பதவியை தக்க வைத்துக் கொண்டனர்.
ஊழல் மற்றும் தனிச்சலுகைகளுக்கு எதிராக போராடப்போவதாக தனது பிரச்சாரத்தில் உறுதியளித்திருந்த ராக்கி இது ஒரு புதிய சகாப்தத்தின் தொடக்கம் எனத் தெரிவித்துள்ளார்.