இத்தனை இடத்தில் வேலை நடக்கின்றதா? அதிர வைத்த பாகுபலி-2 அப்டேட்
பாகுபலியின் வெற்றி குறித்து நாங்கள் சொல்ல தேவையில்லை. இதை தொடர்ந்து இப்படத்தின் இரண்டாம் பாகத்தின் மீது விண்ணை முட்டும் எதிர்ப்பார்ப்பு உருவாகியுள்ளது.
பாகுபலி-2வின் படப்பிடிப்பு முடிந்துவிட்டது அனைவரும் அறிந்ததே, தற்போது இப்படத்தின் கிராபிக்ஸ் வேலைகள் நடந்து வருகின்றதாம்.
உலகின் 33 இடங்களில் இப்படத்திற்கான கிராபிக்ஸ் பணிகள் நடந்து வருவது குறிப்பிடத்தக்கது.
இப்படம் இந்த வருடம் ஏப்ரல் 28ம் தேதி திரைக்கு வரும் என கூறப்பட்டுள்ளது.