இதுவரை இல்லாத வெப்பத்தை உணரவுள்ள ரொறன்ரோ

இதுவரை இல்லாத வெப்பத்தை உணரவுள்ள ரொறன்ரோ

ரொறன்ரோவின் தென் பகுதியின் பெரும்பகுதிகளில் நலவும் கோடையின் காரணமாக அங்கு இதுவரை உணரப்படாத அளவு நீண்ட மற்றும் மிகவும் கடுமையான வெப்ப அலை நிறைந்து காணப்படும் என கனடா சுற்றுச்சூழல் பிரிவு எச்சரிக்கை விடுத்துள்ளது.

இதுகுறித்து கனடா சுற்றுச்சூழல் பிரிவு விடுத்துள்ள அச்சரிக்கை அறிவிப்பில், வெள்ளிக்கிழமை வரை குறைந்த பட்ச இரவு நேர நிவாரணத்துடன், உயர் வெப்பநிலை மற்றும் ஈரக்கசிவான நிலைமை தொடரலாம் என எதிர்வு கூறப்படுகின்றது.

பல பகுதிகளில் காலை நேர வெப்பநிலை குறைந்தது 20 பாகை செல்சியஸில் காணப்படும். அதேவேளை, வெள்ளிக்கிழமை மழை பெய்யும் வாய்ப்பு உள்ளதாகவும் எதிர்பார்க்கப்படுகின்றது. எனவே, வார இறுதி நாட்களில் வெப்பத்திலிருந்து சிறிதளவு விமோசனம் கிடைக்கும்.

ஈரப்பதன் மதிப்பு சில பகுதிகளில் 40 செல்சியசை அண்மிக்கலாம். அதி உயர் வெப்பநிலை மற்றும் ஈரப்பதன் ஏற்படுவதற்கு அமெரிக்காவிலிருந்து திரும்பும் காற்றுத்திணிவே காரணமாக இருக்கும்’ என்றும் கனடா சுற்றுச்சூழல் பிரிவு அறிவித்துள்ளது.

 

Next Post

Leave a Reply

Your email address will not be published.

  • Trending
  • Comments
  • Latest
இராணுவ ஆட்சியின் பக்கம் நாடு பயணிப்பதை தடுக்க வேண்டும் – அநுரகுமார
Easy24News
Easy24News
கொவிட் வைரஸின் புதிய பிறழ்வு ‘நியோகோவ்’ குறித்து வுஹான் விஞ்ஞானிகள் எச்சரிக்கை

Recent News