தமிழ் சினிமாவில் முன்னணி நடிகைகளில் ஒருவர் ஸ்ருதி ஹாசன். சங்கமித்ரா படம் கையைவிட்டு போனாலும் அவர் நடித்த Behen Hogi Teri என்ற ஹிந்தி படம் நல்ல வரவேற்பை பெற்றுள்ளதால் சந்தோஷத்தில் இருக்கிறார்.
ஸ்ருதி ஹாசன் காதல் பற்றி அடிக்கடி செய்திகள், வதந்திகள் பலமுறை வெளியாகியுள்ளன. ஆனால் ஒருமுறை கூட அவர் இது பற்றி மீடியாவில் வாய்திறந்ததில்லை.
அது ஏன் என தற்போது ஒரு பேட்டியில் கூறியுள்ளார். “நீங்கள் எளிதில் காதலில் விழுந்துவிடுவீர்களா?” என கேட்டதற்கு, “இந்த கேள்வி என்னை பலமுறை குழப்பியுள்ளது. நான் எளிதில் காதலில் விழுந்துவிடுவேன், ஆனால் அதில் இருந்து நான் எளிதில் வெளியே வந்துவிடுவேன். அதனால் நான் காதலில் விழவே இல்லை என நான் எடுத்துக்கொள்வேன்” என கூறியுள்ளார்.
மேலும் தன் சொந்த விஷயம் பற்றி வெளியில் பேச தனக்கு பிடிக்காது எனவும் தெரிவித்துள்ளார். ஒருவேளை அவரின் காதலர் பற்றி திருமணம் அன்று தான் மற்றவர்கள் தெரிந்துகொள்ளவேண்டும் என நினைக்கிறாரோ என்னவோ?