இணைந்ததும்-பிரிந்ததும் இது தமிழ் சினிமாவின் நட்பு
தமிழ் சினிமாவில் நிரந்தர எதிரிகளும் இல்லை, நண்பர்களும் இல்லை. அப்படியிருக்க ஒரு சில நண்பர்கள் பிரிந்தால் நாம் எல்லோருக்குமே கவலை வரும். ஏனென்றால், அவர்கள் கூட்டணி அப்படி, பல சூப்பர் ஹிட் படைப்புக்களை கொடுத்துவிட்டு, பிரிந்து அவர்கள் கஷ்டப்படுவது மட்டுமில்லாமல், நம்மையும் கஷ்டப்படுத்துவார்கள்.
இதில் பலரிடம் சண்டைப்போட்டு பிரிந்த லிஸ்டில் முதல் இடத்தில் இருப்பது யார் தெரியுமா? பாரதிராஜா-இளையராஜா, இளையராஜா-வைரமுத்து, இளையராஜா-மணிரத்னம் இப்படி பலருடனும் கூட்டணியை முறித்த இசையின் ராஜா அவர்களே தான், சரி லேட்டஸ்ட் ட்ரண்ட் என்ன என்று பார்ப்போம்.
ஹாரிஸ் ஜெயராஜ்-கௌதம்: தமிழ் சினிமாவிற்கு பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தது இந்த கூட்டணி, ஒரு சில ஈகோ மோதல்களால் இந்த கூட்டணி பிரிய, மீண்டும் எப்போது இணைவார்கள் என ஆவலுடன் இருக்க, என்னை அறிந்தாலில் இந்த நண்பர்கள் மீண்டும் கூட்டணி அமைத்து நம் விருப்பத்தை நிறைவேற்றினர்.
செல்வராகவன்- யுவன்: இவர்களும் பல சூப்பர் ஹிட் பாடல்களை கொடுத்தவர்கள் தான், இவர்கள் பிரிந்து பல வருடங்கள் ஆகிவிட்டது, இனி சேரவே சேராது என நினைத்திருக்க, கான் படத்தின் மூலம் இணைந்தார்கள், ஆனால், யார் கண் பட்டதோ அந்த படம் ட்ராப் ஆக அவ்வளவு தான் இந்த கூட்டணி என அனைவரும் எண்ணினார்கள், ஆனால் நல்ல நட்பு எப்படியும் இணையும் என்பதற்கு உதாரணமாக மீண்டும் நெஞ்சம் மறப்பதில்லை படத்தில் கூட்டணி வைத்து குஷிப்படுத்திவிட்டார்கள்.
சரி கோலிவுட்டில் எல்லோரும் எதிர்ப்பார்த்த இந்த கூட்டணி இணைந்துவிட்டது, ஆனால், சந்தோஷம் ஒன்று இருந்தால், வருத்தம் ஒன்று இருந்து தானே ஆகவேண்டும், அதேபோல் நல்ல நட்பில் நாகப்பாம்பு புகுந்த கதையாக ஜி.வி.பிரகாஷ்-வெற்றிமாறன், ஜி.வி.பிரகாஷ்-இயக்குனர் விஜய் கூட்டணி உடைந்தது. ஆனால், இந்த பிரிவு ஜி.வியின் கதாநாயகன் ஆசையால் நிகழ்ந்தது, பார்ப்போம் இவர்களும் எதிர்காலத்தில் இணைகிறார்களா? என்று.