இடைக்கால ஜனாதிபதியாக பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவை நியமிக்குமாறு சபாநாயகர் தலைமையில் இடம்பெறும் கட்சி தலைவர் கூட்டத்தில் முன்வைக்கப்பட்ட கட்சி தலைவர் கூட்டத்தில் பாராளுமன்றில் சுயாதீனமாக செயற்படும் அரசியல் கட்சி தலைவர்கள் கடும் எதிர்ப்பை வெளிப்படுத்தியுள்ளார்கள்.
கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலகுமாறு வலியுறுத்தியே மக்கள் தொடர் போராட்டத்தில் ஈடுப்பட்டார்கள். ஜனாதிபதி மக்களின் அபிலாசைக்கு மதிப்பளிக்காத காரணத்தினால் வரலாற்றில் என்றுமில்லாதவாறு மக்கள் முதன்முறையாக ஜனாதிபதி செயலகத்தையும், ஜனாதிபதி மாளிகையையும் முற்றுகையிட்டு மக்கள் பலத்தை உறுதிப்படுத்தியுள்ளார்கள்.
கோட்டாபய ராஜபக்ஷவை பதவி விலக வேண்டும், பிரதமர் ரணில் விக்கரமசிங்கவையும் பதவி விலகுமாறு வலியுறுத்துகிறார்கள்.பிரதமர் ரணில் விக்கிரமசிங்க ராஜபக்ஷர்களின் பாதுகாவலன் என மக்கள் கருதுகிறார்கள்.ஆகவே ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக நியமிப்பதை மக்கள் ஒருபோதும் ஏற்க போவதில்லை.பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதை விடுத்து பிரச்சினைகளை தீவிரப்படுத்த வேண்டாம் என கட்சி தலைவர் கூட்டத்தில் வாசுதேவ சுட்டிக்காட்டியுள்ளார்.