இசைப் போராளி சாந்தனின உடல் நலம் காக்க 16,000 கனடிய டாலர்களை சேகரித்து வழங்கிய கனடாவின் “பைரவி ” இசைக் குழுவினர்
தாயக மண்ணின் விடுதலைக்கான இனிய கீதங்களை தனது குரல்வளத்தால் மெருகூட்டிய இசைப் போராளி சாந்தனின உடல் நலம் காக்க 16,000 கனடிய டாலர்களை சேகரித்து வழங்கிய கனடாவின் “பைரவி ” இசைக் குழுவினர்
கனடா ஸ்காபுறோ நகரில் நேற்று ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற நிதி சேகரிப்பு இசை நிகழ்ச்சியின் மூலம் கனடாவின் “பைரவி ” இசைக் குழுவின் நிறுவனர் திரு ஜெயச்சந்திரன், அவரது துணைவியார் திருமதி சத்தியா மற்றும் அவரது குழுவினர் நண்பர்கள் நண்பிகள் ஆகியோர் 16,000 கனடிய டாலர்களை சேகரித்து வழங்கினர்.
ஸ்காபறோ மெற்றோ பொலிட்டன் மண்டபத்தில் நடைபெற்ற மேற்படி நிதிசேர் நிகழ்ச்சிக்கு பல ரசிகர்கள் வருகை தந்து தங்கள் ஆதரவைத் தந்தனர்.
நிதி அன்பளிப்புக்களை வழங்கிய வர்த்தக நண்பர்கள் சார்பில் கொன்சர்வேர்ட்டிவ் கட்சியின் சிரேஸ்ட உறுப்பினர் கணக்காளர் நிமால் விநாயகமூர்த்தி உரையாற்றினார்.
அங்கு வெளியிடப்பட்ட பாடகர் சாந்தன் அவர்களின் பாடல்கள் அடங்கிய நூலை உதயன் பிரதம ஆசிரியர் ஆர். என. லோகேந்திரலிங்கம் வெளியிட தமிழ்க் கல்லூரியின் தலைவர் திரு வி. துரைராஜா பெற்றுக்கொண்டார்