இங்கிலாந்து வீரரை கிண்டல் செய்த வங்கதேச வீரர்கள்: போர்க்களமாக மாறிய மைதானம்!
வங்கதேசத்தில் சுற்றுபயணம் செய்துள்ள இங்கிலாந்து அணி அந்நாட்டில் 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் விளையாடி வருகிறது.
இதில் முதல் போட்டியில் இங்கிலாந்து அணி வெற்றி பெற்றது. இவ்விரு அணிகளுக்கு இடையேயான இரண்டாவது ஒரு நாள் போட்டி மிர்புரில் நேற்று நடைபெற்றது.
இப்போட்டியில் வங்கதேச அணி 34 ஓட்டங்கள் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணியை வென்றது. இப்போட்டியில் வங்கதேச அணிக்கு சற்று தொல்லை கொடுத்த இங்கிலாந்து விரர் பட்லர், வங்கதேச வீரர் தஸ்கின் அகமது பந்து வீச்சில் எல்.பி.டபில்யூ ஆனார்.
ஆனால் இதற்கு நடுவர்கள் அவுட் இல்லை என கூறினர். இதனால் வங்கதேச வீரர்கள் டிஆர்எஸ் முறையை பயன்படுத்தினர். இதில் பட்லர் அவுட் என அறிவிக்கப்பட்டது.
மகிழ்ச்சியின் உச்சிக்கு சென்ற வங்கதேச வீரர்கள் பட்லரை கிண்டல் செய்து வெளியே போ என கிண்டலாக கூறியுள்ளனர்.
இதனால் ஆத்திரமடைந்த பட்லர் ஆவேசமாக வங்கதேச வீரர்களிடம் சென்று வாக்குவாதத்தில் ஈடுபட்டார், இதனால் மைதானத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது.
மேலும் ஏனைய விளையாட்டுக்கள் செய்திகளைப் படிக்க இங்கே அழுத்தவும்