இங்கிலாந்துக்கு கிரிக்கெட் சுற்றுலா மேற்கொள்ளவுள்ள 28 பேர் கொண்ட முதற்கட்ட இலங்கை கிரிக்கெட் குழாம் பெயரிடப்பட்டுள்ளது.
உடற்பயிற்சி பரிசோதனையில் தொடர்ச்சியாக தோல்வியடைந்திருந்த இளம் ஆரம்பத் துடுப்பாட்ட வீரரான அவிஷ்க பெர்னாண்டோவும் உள்ளடக்கப்பட்டுள்ளார்.
அவிஷ்க பெர்னாண்டோவைத் தவிரவும், பங்களாதேஷ் தொடரில் இணைத்துக்கொள்ளப்படாத சரித் அசலங்க, லக்சான் தனஞ்சய, சதீர சமரவிக்ரம, கமில் மிஷார ஆகியோரும் இந்த 28 பேர் கொண்ட முதற்கட்ட குழாம் இடம்பெற்றுள்ளனர்.
இந்த 28 பேர் கொண்ட குழாம் அடுத்த வாரம் 22 பேர் கொண்ட குழாமாக குறைக்கப்படும் என இலங்கை கிரிக்கெட் தெரிவுக்குழு தெரிவித்துள்ளது. இதனையடுத்து, குறித்த 22 பேருக்கும், ‘பயோ பபுள்’ முறையில் ஈடுபடுத்தி பயிற்சிகள் அளிக்கப்படும்.
இங்கிலாந்துக்கு செல்லும் இலங்கை அணி 3 போட்டிகள் கொண்ட சர்வதேச இருபதுக்கு 20 போட்டித் தொடரிலும், 3 போட்டிகள் கொண்ட சர்வதேச ஒரு நாள் போட்டித் தொடரிலும் இங்கிலாந்து கிரிக்கெட் அணியை எதிர்கொள்ளவுள்ளது. இதில், 3 சர்வதேச ஒருநாள் போட்டிகளும் உலகக் கிண்ண சுப்பர் லீக்குக்கு சம்பந்தமானதாகும்.
இலங்கை கிரிக்கெட் குழாம் இங்கிலாந்தில் ஒரு வார காலம் தனிமைப்படுத்தல் நடவடிக்கைகளில் ஈடுபடவேண்டியுள்ளதால், எதிர்ரும் ஜூன் மாதம் 8 ஆம் திகதி அல்லது 10 ஆம் திகதியன்று இங்கிலாந்து பயணாமாகும் என தெரிவிக்கப்படுகிறது.
இதேவேளை, இலங்கை ஒருநாள் கிரிக்கெட் அணிக்கு புதிய தலைவராக நியமிக்கப்பட்ட குசல் ஜனித் பெரேரா இலங்கை சர்வசே இருபதுக்கு 20 அணிக்கும் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
28 பேர் கொண்ட முதற்கட்ட இலங்கை குழாம் விபரம்
குசல் ஜனித் பெரேரா (அணித்தலைவர்),குசல் மெண்டிஸ், தனுஷ்க குணதிலக்க, ஓஷத பெர்னாண்டோ, தனஞ்சய டி சில்வா, நிரோஷன் திக்வெல்ல, தசுன் ஷானக்க, வனிந்த ஹசரங்க, அக்கில தனஞ்சய, லக்சான் சந்தகேன், துஷ்மன்த்த சமீர, இசுரு உதான, கசுன் ரஜித்த, நுவன் பிரதீப், அசித்த பெர்னாண்டோ, பெத்தும் நிஸ்ஸங்க, அவிஷ்க பெர்னாண்டோ,சதீர சமரவிக்ரம, சரித் அசலங்க,லக்சான் தனஞ்சய, அஷேன் பண்டார, சாமிக்க கருணாரட்ண, ரமேஷ் மெண்டிஸ், பிரவீன் ஜயவிக்ரம, பினுர பெர்னாண்டோ, கமில மிஷாரா, ஷிரான் பெர்னாண்டோ, இஷான் ஜயரட்ண.