இங்கிலாந்து சுற்றுப்போட்டியில் இலங்கை அணியின் தோல்விக்கு காரணம் என்ன?
இங்கிலாந்து சுற்றுப் போட்டியில் தோல்வியை சந்தித்து இருந்தாலும் இலங்கை அணி வளர்ச்சி கண்டுள்ளதாக இலங்கை அணியின் பயிற்றுவிப்பாளர் கிரஹாம் போர்ட் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கை அணியில் புதிதாக இணைத்துக் கொண்ட வீரர்களின் திறமைகள் இந்த சுற்றுப் போட்டியில் வெளிவந்துள்ளதாகவும் இதனால் தான் பெரும் மகிழ்வடைவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
சுற்றுப் போட்டியின் ஆரம்பத்தில் அணியில் காணப்பட்ட வேகப்பந்து வீச்சாளர்களின் திறமை இறுதியில் காணப்படாமை கவலை அளிப்பதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இங்கிலாந்து சுற்றுப் போட்டியில் தோல்வி அடைந்தமைக்கு காரணம் அணியின் முக்கிய சில வீரர்கள் ஒய்வில் இருந்தமையே எனவும் சுட்டிக்காட்டியுள்ளார்.