கடந்த 2020 ஆம் ஆண்டு கொவிட்-19 வைரஸ் பரவியதிலிருந்து இங்கிலாந்தில் 10 பேரில் 8 பேர் தொற்றுக்குள்ளாகியிருப்பதாக பிரிட்டனின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
மேலும், கடந்த 2020 ஆம் ஆண்டு ஏப்ரலுக்கும் 2022 ஆம் ஆண்டு பெப்ரவரிக்கு இடைப்பட்ட காலப்பகுதியில் 71 சதவீதமானவர்கள் வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளதாக மதிப்பிடப்பட்டுள்ளது என்று நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த இரண்டு ஆண்டுகளில் 2 கோடியே 20 இலட்சம் தொற்றாளர்கள் மற்றும் 173,980 க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுடன் கொவிட் வைரஸால் மிகவும் பாதிக்கப்பட்டுள்ள நாடுகளில் இங்கிலாந்தும் ஒன்றாகும்.
ஜனவரி மாதம் இங்கிலாந்தில் ஓமிக்ரோன் அலை தாக்கிய பிறகு தொற்றாாளர்களின் எண்ணிக்கை அதிகரித்திருக்கலாம் என்று ஆய்வு தெரிவித்துள்ளது.
கடந்த மாதம் ஒமிக்ரோனின் BA.2 துணை பிறழ்வு காரணமாக, இங்கிலாந்தில் 16 பேரில் ஒருவருக்கு மார்ச் மாதத்தில் வைரஸ் தாக்கியதாக நம்பப்படுகிறது.
எவ்வாறாயினும், இந்த ஆண்டு ஒமிக்ரோன் மாறுபாடு லேசான அறிகுறிகளைக் காட்டுவதால் இறப்பு விகிதம் குறைந்துள்ளது என்று பிரிட்டனின் தேசிய புள்ளியியல் அலுவலகம் கூறியுள்ளது, இருப்பினும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸில் வைத்தியசாலைகளில் அனுமதிக்கப்பட்டவர்கள் அதிகரித்துள்ளனர்.
மார்ச் 26 ஆம் திகதி வரை 49 இலட்சம் பேருக்கு கொவிட்-19 இருப்பதாக மதிப்பிடப்பட்ட இங்கிலாந்து அரசாங்கம் இங்கிலாந்தில் இலவச அரசாங்க பரிசோதனையை நிறுத்தியதால், மார்ச் மாத இறுதியில் நோய்த்தொற்றுகள் மிக உயர்ந்த அளவிற்கு உயர்ந்துள்ளதாக பிரிட்டனின் பதிவு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து சுகாதார செயலர் சாஜித் ஜாவித், மக்கள் “கொவிட் உடன் வாழக் கற்றுக்கொள்ள வேண்டும்” என்று கூறியநிலையில், ஓமிக்ரோன் BA.2 வகை நோய்த்தொற்றுகளின் விரைவான அதிகரிப்புக்கு காரணம் என்று பிரிட்டனின் தேசிய புள்ளியியல் அலுவலகம் தெரிவித்துள்ளது.
இங்கிலாந்து அரசாங்கம் முன்னதாக சுகாதார பணியாளர்களுக்கான கட்டாய தடுப்பூசி திட்டத்தை நிறுத்தியது. அத்தோடு, சர்வதேசப் பயணிகளுக்கான கட்டுப்பாடுகளை எளிதாக்க கொவிட் தொற்று பரிசோதனைக்குப் பிறகு சுய தனிமைப்படுத்தலுக்கான சட்ட விதிகளை முடிவுக்குக் கொண்டுவருவது உட்பட பிற கொரோனா கட்டுப்பாடுகள் இந்த ஆண்டு நீக்கியமை குறிப்பிடத்தக்கது.
#No 1 TamilWebSite | http://Facebook page / easy 24 news | Easy24News – யூடியூப் YouTube | [email protected]